11/02/2009

ஜனாதிபதித் தேர்தலில் ரீ. எம். வி. பி. கட்சியானது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவுக்கே தமது ஆதரவைத் வழங்கும் – கட்சியின் தலைவர்.




நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தமது முழு ஆதரவையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கே வழங்குவதற்கு தமது கட்சியின் மத்திய குழு முடிவெடுத்துள்ளதாக கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளர். நேற்று(31.10.09) வாழைச்சேனை பேத்தாழைக்கிராமத்தில் புதிதாக பாலர் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், எமது கட்சியானது தற்போதைய அரசுடன் ஓர் கௌரவமான பங்காளியாகச் செயற்பட்டு வருகின்றது. மாகாண மட்டத்தில் தனித்துவ கட்சியாக செயற்பட்டு வருகின்ற அதேவேளை தேசிய மட்டத்தில் நாம் யாருடன் இணைந்து செயற்படுவது என்பது குறித்து உறுதியான பார்வையைக் கொண்டுள்ளோம். அதனை ஒருசிலர் பொறுத்துக்கொள்ளாமல் தேவையற்ற வித்தில் மக்களைக் குழப்பு கின்றார்கள். எமது கட்சியினையும் அரசினையும் எதிர் எதிரான சக்திகளாக காட்ட முயற்சிக்கிறார்கள். தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களை யாரும் ஏமாற்றத் தேவையில்லை. கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டபோது எமது கிழக்கு மக்கள் அரசியல் ரீதியான பலத்தினைப் பெறுவதற்கு தற்போது ஆட்சியில் உள்ள அரசு எமக்கு பக்கபலமாக இருந்தது. 20 வருடங்களாக எந்தவொரு தீர்வுகளும் இன்றி காத்துக்கிடந்த எமது மக்களுக்கு மாகாணசபை ஆட்சிமுறைக்கு புத்துயிர் அளித்ததன் மூலம் எமது ஜனாதிபதி அவர்களே சிறுபான்மையினம் மீதான தமது நல்லெண்ணத்தை வெளிக்காட்டியிருந்தார். அதனால்தான் இன்று எமது மக்கள் நிம்மதியாக வாழமுடிகின்றது. நச்சுக்குப்பிகளை சுமந்துசென்ற எமது பிஞ்சு உள்ளங்களுக்கு இன்று விடுதலை கிடைத்திருக்கின்றது. யாரும் எங்கும் எந்தவேளையிலும் சென்று வரும் சாதாரண சூழ்நிலை சுமர் 30 வருடங்களுக்கு பின்னர் எமது மக்களுக்கு கிடைத்திருக்கின்றது. எமது மாகாணத்தை இந்த மண்ணின் புதல்வர்களே ஆளும் வாய்ப்பை ஏற்படுத்தியதின் ஊடாக சின்னாபின்னமாய்க் கிடந்த இனவுறவுகள் இன்று சீர்செய்யப்பட்டிருக்கின்றது. எனவேதான் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு வாழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்ளே வாக்களித்து மீண்டும் அவரை ஜனாதிபதி ஆக்குவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் “கிழக்கின் உதயம் தொடரவும், மகிந்த சிந்தனை வேலைத்திட்டதிற்கூடாக எமது மாகாணத்தின் விவசாய உற்பத்தி பன்மடங்காக பெருகவும் ஜனாதிபதி ராஜபக்ச அவர்களின் ஆட்சி இன்னும் இன்னும் இந்த நாட்டில் நீடிக்க வேண்டும். இனப்பிரச்சனைக்கான தீர்வில் இதுவரை இருந்த எந்தவொரு ஜனாதிபதியையும் விட உறுதியான முடிவுகளை எடுத்து வருபவர் இன்றைய ஜனாதிபதியே ஆகும். இன்றைய மாகாணசபை ஆட்சிமுறையை பலப்படுத்தி ப+ரண அதிகாரம் கொண்ட வலுமிக்க ஒரு சபையாக வளர்த்தெடுக்க எமது ஜனாதிபதிக்கு பலமான ஆதரவை வழங்க வேண்டியது சிறுபான்மைச் சமூகத்தினர் ஆகிய எமது கடமையாகும்.” எனத் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment