11/01/2009

சரக்கு ரயில் புரண்டதில் கொழும்பு-மட்டு.- திருமலை சேவைகள் பாதிப்பு




கெக்கிராவை - கலாவேவ இடையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் கொழும்புக்கும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கும் இடையிலான ரயில் சேவைகள் நேற்று மாலை முதல் தடைப்பட்டுள்ளன.

நேற்று முற்பகல் மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் வண்டியே தடம் புரண்டதாகவும் 5 ரயில் பெட்டிகள் தண்டவாளத்திற்கு வெளியே தடம் புரண்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

இதன் காரணமாக தற்போது மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து ரயில் சேவைகள் கல்லோயாச் சந்தி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் பாதை திருத்த வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்ற போதிலும், ரயில் சேவை வழமைக்குத் திரும்புவது குறித்து மாலையே தெரியவரும் என ரயில்வே திணைக்களம் கூறுகின்றது.

0 commentaires :

Post a Comment