11/01/2009
| 0 commentaires |
புலிகள் ஆள்பிடிக்கும் அவலத்தை மறைக்க சிவராமை (தராகி)அழைத்துச் சென்று இந்த திகிலிவெட்டை பள்ளிக்கூட கட்டிடத்தில்தான் மக்களைச் சந்திக்கச் செய்தனர்.
புலிகள் ஆள்பிடிக்கும் அவலத்தை மறைக்க சிவராமை (தராகி)அழைத்துச் சென்று இந்த திகிலிவெட்டை பள்ளிக்கூட கட்டிடத்தில்தான் மக்களைச் சந்திக்கச் செய்தனர். புலிகளும் சிவராமும் விரும்பியபடியே சிவராமின் கேள்விகளுக்கு மக்கள் பதில் சொல்லுகின்றனர். அவர்கள் கட்டாயமாக ஆட்பிடிப்பதில்லை. நாங்கள் விரும்பித்தான் எங்கள் குழந்தைகளை போராட்டத்திற்காக அனுப்புகிறோம். இந்த வாக்கு மூலங்கள் சரிநிகர் ஊடாக சர்வதேசம் எங்கும் பரவுகிறது. இப்படியாக தங்களது ஆள்பிடி படலத்தை நியாயப்படுத்தி படுவான்கரைப் பாலகர்களை எல்லாம் தமது படையணிகளில் சேர்த்த புலிகளின் கொடூரங்கள் மறைந்து இந்த திகிலிவெட்டை போன்ற நூற்றுக்கணக்கான குக்கிராமங்களின் மக்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஆயிரம் கனவுகளுடன் அவர்களது குழந்தைச் செல்வங்கள் பாடசாலைகளை நிரப்புகின்றனர். கிழக்கு மாகாணத்தை கல்வித்துறையில் பாரிய முன்னேற்றம் காணச் செய்யவேண்டும் என்று முதலமைச்சர் எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு அங்கமாக திகிலிவெட்டை பாடசாலைக்கு இருமாடிக்கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல்லை அவர் நாட்டியிருக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே கல்குடாவலயக் கல்வி அலுவலகத்தில் கோறளைப்பற்று கோட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய மட் திகிலிவெட்டை அ. த. க. பாடசாலையில் இன்று இரு மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நட்டு வைத்தார். இ;ந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு முதல்வர், இப் பிரதேசமானது மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் அதிகளவான வளங்களைக் கொண்ட ஓர் பிரதேசமாகும். கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட இப் பிரதேசத்தினை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டியது எமது அனைவரினதும் கடமையாகும்.நான் இப் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து உரையாடிய போது, இப் பிரதேசத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைத்து, இப் பாடசாலைக்கான இருமாடிக் கட்டடத்தினை அமைப்பதற்காக எனது அமைச்சின் நிதியினை ஒதுக்கியிருக்கிறேன். இப் பாடசாலையானது மிகவும் பழமைவாய்ந்த ஓர் பாடசாலையாகும். அதாவது 1961ம் ஆண்டு அமைக்கப்பட்ட இப் பாடசாலையிலே இன்று வரை எந்தவொரு கட்டிடிடமோ புதிதாக அமைக்கப்பட வில்லை. எனவேதான் இதனை நன்கு உணர்ந்து, இப் பிரதேசத்தின் கல்வியினை வளர்ச்சியடையச் செய்வதன் மூலம் ஏனைய அபிவிருத்திகளை முன்னெடுக்கலாம். பொதுவாக பாதை அபிவிருத்தி, குடிநீர் பிரச்சினை, மற்றும் வாழ்வாதாரம் போன்றன தொடர்பில் அதிக அக்கறை கொண்டு செயற்படுவதோடு, இப் பிரதேசத்தினை மட்டக்களப்பு மாவட்டத்திலே முன் மாதிரியான ஓர் பிரதேச மாற்றுவதற்கு எம்மோடு அனைத்து அதிகாரிகள் மற்றும் மக்களும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் ஜீவரெட்ணம் தலைமையில் இடம் பெற்றது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் மீள்குடியேற்ற இணைப்பதிகாரி அ.செல்வேந்திரன், பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ் ஞானசேகரம், கோட்டக்கல்வி அதிகாரி தங்கராஜா, பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
0 commentaires :
Post a Comment