11/14/2009
| 0 commentaires |
வவுனியாவிலிருந்து ஏ-9 வீதியூடான பஸ் பிரயாண நடைமுறை இன்று முதல் தளர்வு
- யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவ அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே வவுனியாவில் இருந்து ஏ-9 வீதியூடாக பஸ்களில் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்லாமல், நாட்டின் எப்பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் செல்பவர்களும் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் தமது அடையாள அட்டையின் போட்டோ பிரதி ஒன்றைக் கொடுத்து, அதில் இராணுவ அதிகாரியின் கையெழுத்து முத்திரையைப் பதித்துக் கொண்டு பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நடைமுறை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இபோசவின் யாழ். பொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதையடுத்து, இன்று 8 பஸ்களில் பயணிகள் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணமாகியதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்குப் பயணம் செய்பவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்றும் இபோசவின் யாழ். பொதுமுகாமையாளர் கணேசபிள்ளை தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்களும் இதே நடைமுறையைப் பின்பற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 commentaires :
Post a Comment