கிழக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளின் அபிவிருத்திப் பணிக்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 3கோடியே 85 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் அப்பகுதிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே இந்த நிதியினை ஒதுக்கியுள்ளார்.
மூதூரில் மீள்குடியேற்றப்பட்ட பகுதி பாடசாலைகளில் மாணவர்கள் தளபாடங்கள் இன்றி நிலத்தில் அமர்ந்து கற்பதால் அவர்களுக்கு தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கு 45 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதோடு.
கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதி பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்க 500 துவிச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளதோடு, அத்துடன் வெருகல் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கு 20 இலட்சம் ரூபாவும் போரதீவுப் பற்று மற்றும் முறக்கட்டான சேனை விளையாட்டு மைதான புனரமைப்பிற்கு தலா 10 இலட்சம் ரூபாவும் வேப்பவட்டுவான் வீதி புனரமைப்பு மற்றும் போரதீவுப் பற்று பொது நூலக புனரமைப்பு போன்றவற்றிற்கு தலா 10 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதேவேளை. மூதூர் பாட்டாளிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பேத்தாழை விபுலாநந்தா வித்தியாலயம் என்பவற்றிற்கு மாடிக்கட்டிடம் அமைக்க தலா 50 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதோடு மீள்குடியேற்ற பாடசாலைகளுக்கான பாண்டு வாத்திய கொள்வனவிற்காக 20 இலட்சம் ஒதுக்கீடு செய்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது
0 commentaires :
Post a Comment