11/11/2009

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கு 3 வருடத்தில் ரூ 75 ஆயிரம் மில். செலவீடு ஒலுவில் துறைமுகப் பணி 2010 இறுதிக்குள் பூர்த்தி

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக கடந்த மூன்று வருட காலத்தில் 51,130 திட்டங்களுக்காக 75 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப் பட்டுள்ளது என தேசிய அபிவிருத்தி தொடர்பான மத்திய நிலைய ஊடகப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

700 மில்லியன் ரூபா செலவில் நிர்மா ணிக்கப்பட்டு வரும் ஒலுவில் துறைமுகப் பணிகள் 2010 இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் விளக்கமளிக்கும் மாநாடு நேற்று அம்பாறை மொண்டி ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது :-

இந்த நாட்டை நிறைவேற்று அதிகாரம் கொண்ட நான்கு ஜனாதிபதிகள் ஆட்சி செய்த போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே 30 வருட யுத்தத்திற்கு முடிவு கண்டு நாட்டில் அமைதியை நிலைநாட்ட முடிந்தது என்றார்.




0 commentaires :

Post a Comment