11/10/2009

22 வருடங்களின் பின்னர் மட்டு. நகர் கலாச்சாரப் பேரவையின் கலை இலக்கிய விழா




22 வருடங்களின் பின்னர் நடை பெற்ற மட்டக்களப்பு மாவட்ட கலாச்சாரப் பேரவையின் கலை இலக்கிய விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படடுள்ளனர்.கலாச்சார அலுவல்கள் திணைக்ளமும் மட்டக்களப்பு மாவட்ட கலாச்சாரப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட கலை இலக்கிய விழா நேற்று சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக மண்டனத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடை பெற்ற போது குறிப்பிட்ட கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எஸ்.ரத்தினசிங்கம் ( நாட்டுக் கூத்து ) மண்டூர் அசோகா ( இலக்கியம் ) ,திருமதி பூ.சிவராசா ( இலக்கியம் ) ,சி.க.பொன்னம்பலம் ( கவிதை) ,ஜீவம் ஜோசப் ( இசை) ,ஐ.அரசரத்தினம் ( கூத்து ) ,எம்.எஸ்.எஸ். ஹமீட் (கவிதை) ,ரீ மீராலெப்பை ( கவிதை) ,எஸ்.எல்.எம். ஹனீபா ( இலக்கியம் ) ,எம்.மகாதேவன் ( இலக்கியம் ) ஆகியோரே கௌரவிக்கப்பட்டுள்ளனர்..

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வி.பி பாலசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.மேலும் தேசிய மற்றும் மாகாண இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் இந் நிகழ்வுகளில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.1965 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கலாச்சாரப் பேரவை 1987 ம் ஆண்டு வரை இயங்கிய போதிலும் அதன் பின்னர் கடந்த 22 வருடங்களாக செயலிழந்து காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.



0 commentaires :

Post a Comment