11/25/2009

பிரான்ஸில்21 புலிகளுக்கு சிறை: தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு தடை



புனர்வாழ்வுக்கழகமும் தடை செய்யப்படலாம்!!

பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 21 பேருக்கு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் இயங்கிய புலிகளின் அமைப்பை கலைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக் கணக்கான ய+ரோக்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிச் சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரான்ஸ் பொறுப்பாளராகச் செயற்பட்ட நடராஜா மதிந்திரன் (பரிதி) என்பவர் உட்பட 21 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் 1986ம் ஆண்டிலிருந்து இயங்கிவந்த அமைப்பு புலிகளுடன் தொடர்புகொண்டிருந்ததாகவும், புலிகளுக்காக இந்த அமைப்பைச் சேர்ந்த 22 பேர் தமிழ் மக்களிடம் கட்டாய நிதி வசூலிப்பிலும் மற்றும் தமிழ் மக்களை அச்சுறுத்துவதிலும் ஈடுபட்டுவந்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

கடந்த மாதம் பல நாட்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் சார்பில் 11 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடியதுடன், அமெரிக்காவிலிருந்து பிரபல மனிதஉரிமைவாதியான திருமதி கரன் பாக்கர் நேரில் ஆஜராகி 22 பேர் சார்பிலும் சாட்சியமளித்திருந்தார்.

நேற்றைய தினம் 23ம் திகதி வழக்கு தொடர்பான திர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். அந்தத் தீர்ப்பில் 21 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளதுடன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவையும் கலைக்குமாறு சம்பந்தப்பட்ட அரசதிணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளனர்.

புலிகளின் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை ஆனாலும் சிலர்மீது அந்த அமைப்பில் பணியாற்றியதாகவும் அதற்காக பணம்சேர்த்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

எனவே இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அதனையும் தடைசெய்யுமாறு வழக்குத்தொடுநர் விண்ணப்பிக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

நேற்றைய தீர்ப்பில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விபரமும் தண்டனை விபரமும் வருமாறு:

நடராஜா மதீந்திரன் அல்லது பரிதி - (புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர்) 7 வருட சிறைத்தண்டனை

துரைசாமி ஜெயமூர்த்தி அல்லது ஜெயா - (நிதிப் பொறுப்பாளர்) - 6 வருட சிறைத்தண்டனை

புதியவன் தயாளன் - 3 வருட சிறைத்தண்டனை

கந்தசாமி உமாகரன் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

மகாலிங்கம் ஜெயதாஸ் - 4 வருட சிறைத்தண்டனை

மார்க்கண்டு ஜெயபாலசிங்கம் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

முகுந்தன் ஜெயவீரசிங்கம் - 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டன்)

செல்லக்கண்டு ரவிகுலம் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

கந்தையா மோகனதாஸ்- 2 வருட சிறைத்தண்டனை

போல் நிய+மன் - 18 மாத சிறைத்தண்டனை (6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)

சின்னத்தம்பி சுதாகரன் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

அரவிந்தன் துரைசாமி அல்லது மேத்தா - 5 வருட சிறைத்தண்டனை (18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)

முருகானந்தம் ராஜலிங்கம் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

காந்தரூபன் பாலசிங்கம் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

ஏ. சகியரூபன் - 2 வருட சிறைத்தண்டனை

வின்சன் அமலதாஸ் - 2 வருட சிறைத்தண்டனை (6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)

பேயாஸ் புலேந்திரன் - நிரபராதி

ஸ்ராலின் சவிரிமுத்து - 4 வருட சிறைத்தண்டனை

ரவி மாணிக்கம் அல்லது ஊத்த மாணிக்கம் - 2 வருட சிறைத்தண்டனை (6 மாதம் ஒத்திவைக்கப்பட்ட)

பார்த்திபன் சிறிகாந்தன் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

முருகன் சிவசுப்பிரமணியம் - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

சிவதாசன் யோகராசா - 3 வருட சிறைத்தண்டனை (1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட)

0 commentaires :

Post a Comment