ஜுடி தேவதாசன்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்
வடக்கு கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் மிகவும் துன்ப நிலைக்கு உள்ளகி இருப்பவர்கள் பெண்களே. கணவன், மகன், தந்தை, சகோதரர்களை இழந்து 30 வருடங்கள் சொல்லொண்ணாத் துயரை அனுபவித்து வந்த பெண்கள் தற்பொழுது நிம்மதி பெருமூச்சை விடுகின்றனர். வேலைக்கு. படிப்புக்கு மற்றும் வெளியே சென்று திரம்பி வருவார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்ததுதான் பெரும் மகிழ்ச்சி. ஒவ்வொரு பெண்ணும் இதனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சட்டங்கள் மற்றும் கட்டமைப்புக்களை உறுதிப்படுத்தி உணர்வு பூர்வமான சேவை வழங்குனரை உருவாக்குவதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
இந்த நாட்கள் எமக்கு வலுவான ஆளுமையுள்ள பெண்களை உருவாக்கி அதன் மூலம் இப்பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள மனிதநேயமிக்க மனிதரை சிந்திக்க வைக்கும் பாரிய பொறுப்பை உணர்த்துகிறது.
0 commentaires :
Post a Comment