11/09/2009

கியூபா நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை மியன்மார் ஜனாதிபதி 12 இல் விஜயம்



கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் மார்கொஸ் ரொட்ரிகஸ் கொஸ்டா இன்று (9ம் திகதி) இலங்கை வருகிறார்.

இலங்கைக்கும் கியூபாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாகவே அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்.

இதேவேளை இலங்கை - கியூபா 60 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சில் இன்று முத்திரையொன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் புதன்கிழமை தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சரும் வியாழக்கிழமை மியன்மார் ஜனாதிபதியும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள தாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.



0 commentaires :

Post a Comment