11/23/2009

வடக்கு மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு 1165 மில்லியன் ரூபா ஒதுக்கீடு



வட மாகாணத்தில் மீன்பிடித்துறை அபிவிருத்திக்கான மத்திய கால திட்டத்திற்காக 1165 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்தது.

இதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைதீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

வடக்கிலுள் மீன்பிடித்துறைமுகங்கள், இறங்குதுறைகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதோடு நாரா நிறுவன பிரதேச அலுவலகங்களும் அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களும், சிறிய மீன் குஞ்சுகளை வளர்க்கும் நிலையங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

0 commentaires :

Post a Comment