11/14/2009

1000 ஐ. தே. க. ஆதரவாளர் நேற்று சு. க. வில் இணைவு

பலாங்கொடை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகுமார் உட் பட ஐ.தே.க. ஆதரவாளர்கள் 1,000 பேர் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக மின்வலு எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

நேற்று பலாங்கொடை பிட்டுகல தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவர்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவைச் சந்தித்து அவரிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த 30 வருட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்துள்ள இவர்கள் தமது பகுதிகளில் ஐ. தே. க. ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவில்லையெனவும் தற்போதைய அரசின் காலத்தில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன மூலம் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாம் அராங்கத்துக்குப் பூரண ஆதரவு வழங்கி அபிவிருத்தியைப் பலப்படுத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


0 commentaires :

Post a Comment