11/24/2009

2010ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்டம் இன்று முதலமைச்சரினால் சமர்ப்பிப்பு

dsc03479-copyகிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 18 மாதங்கள் கடந்த நிலையில் கிழக்கு மாகாண சபையின் 2வது வரவு செலவுத் திட்டம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. மேற்படி வரவு செலவுத் திட்டத்தின் 2ம் குழுநிலை விவாதம் இன்று 09.30 மணிக்கு கௌரவ மாகாண சபையின் சபாநாயகர் பாயிஷ் தலைமையில் கூடிய சபை அமர்வில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.

இன்றைய முதல்நாள் அமர்வில் ஆளுனர் செயலகம் பேரவைச் செயலகம் மாகாண சேவை, பொதுக்குழு, முதலமைச்சர் செயலகம், ஆகியவற்றிற்கான வரவு செலவுத்திட்டம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. இதில் குறிப்பாக முதலமைச்சர் செயலகத்திற்குள் உள்ளுராட்சி திணைக்களம், கிராமிய அபிவிருத்தி உல்லாசம், மீழ்குடியேற்றம் போன்ற அமைச்சுக்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரும் குறித்த அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் வரவு செலவுத் திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து அதற்கான அங்கிகாரத்தை கோரியிருந்தார் இது வாக்கெடுப்பிற்கு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே போல் ஆளுனர் செயலகம் பேரவைச் செயலகம் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு தொடர்பான வரவு செலவுத்திட்டஅறிக்கையும் வாக்கெடுப்பில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

img_2127




0 commentaires :

Post a Comment