10/05/2009

TMVPயின் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு திட்டத்திற்கான வளங்கள் வினியோகம் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.


TMVP கட்சியின் ஆயுதப்பிரிவு கலைக்கப்பட்ட பின்னர் அதன் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் திட்டத்தின் கீழ் IOM நிறுவனமானது USAID இன் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட மறுவாழ்வுத் செயல் திட்டத்தின் முதலாவது வளங்கள் வினியோகிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு YMCA மண்ணடபத்தில் நடைபெற்றது. இதில் TMVP கட்சியின் முன்னாள் போராளிகளின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான தொழில் முயற்சிக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் TMVP கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் IOM நிறுவன பிரதிநிதிகள் USAID பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா ஆகியோரும் TMVP கட்சியின் முன்னாள் போராளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment