10/21/2009
| 0 commentaires |
இலங்கையில் மிகவும் நீளமான பாலம் இன்று மக்கள் பாவனைக்கு
இலங்கையில் மிக நீளமானதும் கடலுக்கு குறுக்காகவும் அமைக்கப்பட்ட பாலம் எனும் பெருமைக்குரியது இன்று திறக்கப்பட்ட கிண்ணியா பாலமாகும். எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இப்பாலம் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. சவுதி அரேபிய நாட்டின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாலமானது சுமார் 396 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாய் 29 கோடி ரூபாய் செலவில் அமைக்க்பட்டதாகும். சுமார் 30 வருட காலத்தின் பின்னர் கிழக்கில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டு வருகின்ற அபிவிருத்திப் பணிக்கு இப்பாலமானது மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமி;ழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்
கிழக்கு மாகாணத்தில் தற்போது மஹிந்த சிந்தனையில் கிழக்கில் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் சகல துறைகளிலும் பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.,அதிலும் மிகவும் குறிப்பாக பாதைகள், குளங்கள், பாலங்கள் என்பன மிகவும் முதன்மைப்படுத்தப்பட்டு அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபையின் தோற்றகத்தின் பின்னர் கிழக்கின் பல பாகங்களிலும் நெடுஞ்சாலைகளின் அபிவிருத்தி பணிகள் நடைபெறுகின்றது. திருமலை மட்டக்களப்பு நெடுஞ்சாலை, அதே சமயம் மட்டக்களப்பு அம்பாறை பிரதான வீதி, வெருகல் பாதை திருமலையிலிருந்து புல்மோட்டை வரையான பிரதான பாதை எனப் பல பிரதான பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அதே போல் நீர்ப்பாசனக் குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு விவசாயச் செய்கைக்காக அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்கு மாகாணத்திலேயே மிகவும் முக்கியமான பல பாலங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டு வருகின்றமை விசேட அம்சமாகும். அதில் சில பாலங்கள் முடிவடைந்து மக்கள் பாலவனைக்காக திறந்து விடப்;பட்டிருக்கின்றது. ஒரு சில பாலங்களில் வேலைகள் முடிவுறும் தறுவாயில் இருக்கின்றது. அதனடிப்படையில் கிழக்கு மாகாணம் என எடுத்துக்கொண்டால் மிக பெரிய பல பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு அமைக்கப்பட்டு வருகின்ற அறுகம்பை பாலம், கல்லடிப்பாலம், ஓட்டமாவடிப்பாலம், கிண்ணியாப்பாலம்,யான ஓயா பாலம், இறக்ககண்டிப்பாலம், புடவைக்கட்டுப்பாலம் என பல பாலங்கள் மிகவும் பிரமாண்ட மான முறையில் அமைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.இதனடிப்படையில் எதிர்வருகின்ற காலங்களில் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் இப்பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பெரிதும் பயன்படும். அத்தோடு இதனூடாக அதிகளவான பயன் எமது கிழக்கு மக்கள் அடைகின்றனர். இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தாவாக அமைந்த எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எமது நாட்டினதும் எமது மாகாணத்தினதும் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதில் மன மகிழ்ச்சி அடைகின்றேன் எனக் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment