10/20/2009

சுகாதார தொண்டர்களுக்கான நியமனக்கடிதங்கள் இன்று கையளிப்பு






கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை மிகவும் பூதாகரமாக பேசப்பட்ட ஓர் விடயம் கிழக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனப் பிரச்சனையாகும் இன்று இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தய கலாநிதி வு. தேவராஜன் தலைமையில் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் சுமார் 240 பேர் முதற்கட்டமாக தங்களுக்கான நியமக்கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவரும்,
கிழக்கு மாகாண சபை பொறுப்பேற்கப்பட்டவுடன் முதலாவதாக வழங்கப்படவேண்டிய நியமனமாக இச்சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் அமைந்திருந்தது. ஆனால் பலரது இடர்பாடுகளுக்கு மத்தியில் பின்போடப்பட்டு பின்போடப்பட்டு தாமதமாகிக் கொண்டே போனது. ஆனால் இன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்


ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களின் விடா முயற்சியினால் 240 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கக்கூடியதாக உள்ளது.
கிழக்கு மாகாண சபையின் நகர்வுகளில் மிகவும் ஓர் முக்கியமான நாளாக இதனை நாம் கருதவேண்டும் காரணம் இவ்வாறானதோர் சிக்கலான சூழ்நிலையிலும் இவ் நியமனமானது உடனடியாக வழங்கப்பட்டு அவர்களுக்கான தொழில் வாய்ப்பு வழங்கப்படுவதனை இட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இவர்கள் அனைவரும் எதிர்வருகின்ற 21.10.2009 அன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றார்கள்.இந் நியமனம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு வதந்திகளையும் பிரச்சனைகளையும் தோற்றுவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவற்றுக்கொல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றால் அது எமது மாகாண சபைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். அத்தோடு இன்று நியமனம் பெற்றிருக்கின்ற அனைவரும் தமது குடும்ப வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற ஓர் தொழிலாக இதனைக் கருதாமல் சேவை மனப்பான்மையோடு பணியாற்றி கிழக்கு மாகாண சுகாதாரத்துறையில் ஓர் புதிய திருப்பத்தினை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

0 commentaires :

Post a Comment