அண்மையில் அம்பாறையில் உள்ள தமிழ் மகா வித்தியாலயம் இடித்து நாசம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக த.ம.வி.பு கட்சியின் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் புஸ்ப்பராசா இன்று நடைபெற்ற மாகாண சபை அமர்வில் தமது வாதத்தினை முன்வைத்தார். அவர் முன்வைத்த வாதத்தில் குறிப்பிடப்படதாவது.
கிழக்கு மாகாணத்திலே அம்பாறை மாவட்டத்தில்ட நடந்த இச்சம்பவமானது இன நல்லுறவை சீர்குலைக்கும் ஓர் சதி முயற்சியாகும். காரணம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் தலைதூக்கியிரக்கின்ற இச்சூழலில் தமிழ் பாடசாலை ஒன்று இராணுவ நடவடிக்கைக்காக இடித்து தரைமட்டமாக்கப்படுவது உண்மையிலேயே வேதனையளிக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலே சிங்கள மகா வித்தியாலயம் இரக்கின்றது. அதேபோல் கல்முனை மற்றும் அக்கரைப்பற்றில் தமிழ் மகா வித்தியாலயம் இருக்கின்றது இவற்றிற்கெல்லாம் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை ஆனால் மாறாக திட்டமிட்டு இவ் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தை மாத்திரம் இவ்வாறு இடித்து தகர்ப்பது நியாயமற்ற ஒன்றாகும் எனவே இதுபோன்ற செயற்பாடுகளை இனிமேலும் செய்யாது, இதற்கு கல்வி அமைச்சும் அனுமதிக்கக்கூடாது அத்தொடு மொழி ரீதியான முரண்பாட்டிற்கு இடமளிக்கக்கூடாது எனவே மேற்குறித்த அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தினை கல்முனை கல்வி வலயத்திற்கு மாற்றித்தர வேண்டும். இனி வருகின்ற காலங்களிலாவது இன நல்லுறவை பாதிக்கின்ற செயல்களுக்கு கல்வி அமைச்சு மாத்திரமன்றி எந்த ஓர் அமைச்சும் இடமளிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
Categories: செய்திகள்
Tags:
-->
0 commentaires :
Post a Comment