அமெரிக்கா இலங்கையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுகிறது என்று குற்றஞ்சாட்டி அந்நாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து
ஜாதிக ஹெல உறுமய நேற்றுக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
விகாரமகாதேவி பூங்காவுக்கு முன்பாக முற்பகல் 10.30 மணிக்கு ஒன்றுகூடிய ஜாதிக ஹெல உறுமயவினர் அங்கிருந்து பேரணியாக அமெரிக்கத் தூதரகம் நோக்கிச் சென்றனர். அமெரிக்கத் தூதரகம் முன்பாக அவர் கள் சுமார் அரைமணி நேரம் வரை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். “இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை ஒரு போர்க்குற்றமா?”, “அமெரிக்காவில் ஆபிரகாம்லிங்கன் 6 லட்சம் பேரைக் கொன்றமை சரியா?”, போன்ற கோஷங்களை ஆர்ப்பாட் டக்காரர்கள் எழுப்பினர்.
அத்தோடு அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ரொபேர்ட்ஓ பிளேக், அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்ரன் ஆகியோரைக் கண்டித்தும் அவர்கள் கோஷமெழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் வண.அத்து ரலிய ரத்தினதேரர் அங்கு உரையாற்றிய போது இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதை அமெரிக்கா விரும்பவில்லை.இங்கு யுத்தம் முடிவடைந்துள்ளதால் அமெரிக்காவால் இங்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாதுள்ளது. இதனால் மீண்டும் இங்கு பயங்கரவாதத்தை வளர்க்கவே அந்நாடு முயற்சிக்கிறது. இந்நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் செயற்பாடுகளைத் தேசப்பற்றாளர்களான எம்மால் ஒருபோதும் ஏற்க முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம். அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். என்றார் அவர்.
0 commentaires :
Post a Comment