10/05/2009

மட்டக்களப்பில் இரண்டு நாள் வர்த்தக கண்காட்சி

மட்டக்களப்பில் தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாள் வர்த்தக மற்றும் கைத்தொழில் கண்காட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
புனித மிக்கேல் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இக் கண்காட்சியில் விவசாயம் மீன்பிடி சிறுகைத்தொழில் சார்ந்த பல்வேறு தரப்பட்ட உற்பத்திப் பொருட்களும் விற்பனைக்கும் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன.
அரச திணைக்களங்கள் மற்றும் கொழும்பிலுள்ள தனியார் நிறுவனங்களினால் இவை விற்பனைக்கும் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்ததோடு தொழில் துறை ஆலோசனைகளும் வழிகாட்டிகளும் வழ்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து பாடசாலை மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் இக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா மாகாண சபை உறுப்பினர் இராதுரைரத்தினம் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலரும் இங்கு வருகை தந்திருந்தனர்.




0 commentaires :

Post a Comment