10/30/2009
| 0 commentaires |
கிழக்கு முதல்வர் அக்கரைப்பற்று பெரிய தம்பிரான் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில்; ஈடுபட்டார்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று அக்கரைப்பற்றுப் பிரதேசத்திற்குச் சென்று அப்பிரதேச மக்களோடு கலந்துரையாடினார். இதன்; முதற் கட்டமாக அக்கரைப்பற்று பெரியதம்பிரான் ஆலயத்திற்குச் சென்று வமிபாட்டில் ஈடுபட்டதோடு, அவ்வாலயத்தின் தேவைகள் மற்றும் அப்பிரதேச மக்களின் தேவைகள் குறிது;தும் ஆலயத்தின் தர்மகர்த்தாக்களிடம் கேட்டறிந்து கொண்டார். அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு முதல்வரின் அலுவலகம் அமைப்பது தொடர்பில் அண்மையில் பலவேறு பிரச்சினைகள் எழுந்தன. அவைகள் அனைத்தும் தற்போது இடைநிறுத்தப்பட்டிருக்கின்ற இவ் வேளையில், அபிவிருத்திப் பணிகள் குறித்து பல்வேறுபிரதேசங்களைச் சாந்த மக்களும் தமது கோரிக்கைகளை முதல்வர் எடுத்துக் கூறி வருகின்றார்கள். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அமைப்பாளர் வி.சத்தியசீலன் அவர்களின் தேவைகள் குறித்து முதல்வர்க்கு விளக்கி அவரின் ஊடாக பல தேவைகள் நிறைவேற்றப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment