10/22/2009

மண்முனை மேற்கு வவுணதீவில் ஏழு நூலகங்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேசத்தில் ஏழு நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இந்நூலகங்களை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். சத்தியானந்தி, வவுணதீவுப் பிரதேச சபையின் தவிசாளர் கே. சுப்ரமணியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள கன்னங்குடா, ஈச்சன்தீவு, நாவற்காடு, விளாவெட்டுவான், நரிப்புள்தோட்டம், மகிழவெட்டுவான், வவுணதீவு ஆகிய ஏழு இடங்களில் இப்புதிய நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இப்புதிய நூலகம் ஒவ்வொன்றும் 16 இலட்சம் ரூபா செலவில் இரண்டு மாடிக்கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment