10/05/2009

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாசிக்குடாவில் களியாட்டம்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று பாசிக்குடாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அனுசரணையோடு கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் உதயஜீவதாஸ் தலைமையில் மிகப்பிரமாண்டமான முறையில் கலாசார மற்றும் களியாட்ட நிகழ்வு இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கிழக்கு மாகாணத்தின் விடுவிப்பின் பின்னர் இவ்வாறானதோர் களியாட்ட நிகழ்வு திறந்த வெளியரங்கில் இடம்பெறுவது மிகவும் பாராட்டுதற்குரிய ஒன்றாகும். மூவினங்கள் ஒன்றாக சங்கமித்து இதில் கலந்து கொண்டமையானது, எமது கிழக்கு மாகாணத்தில் இனநல்லுறவு பெரிதும் பாதுகாக்கப்படுவதனை விளங்கிக் கொள்ளலாம். அண்மையில் கல்லடி கடற்கரையில் இடம்பெற்ற கலாசார நிகழ்வில் மூவின மக்களும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் நல்ல ஓர் சமூக உறவைப் பேணமுடியும் என மக்கள் நம்புகின்றார்கள். இதற்கு மாகாணத்தின் முதலமைச்சரின் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது. இதே போல் கிழக்கபை; பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஒவ்வொருவரும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பாடுபட வேண்டும்.

0 commentaires :

Post a Comment