மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 60வருடங்களாக ஒரு பேருந்து நிலையம் இல்லாத குறையினை கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தீர்த்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல்வேறு அரசியல்வாதிகள் காலம் காலமாக தங்களது ஆட்சி காலங்களை முடித்துக்கொண்டு இதுபோன்ற பொது விடயங்களை கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் இன்று 17 மாதங்களே ஆட்சியில் இருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் உயரிய சிந்தனையில் உருவான இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. மட்டக்களப்பு நகரத்திலே மிகவும் பழமை வாய்ந்த நிலையில் காணப்பட்ட இப்பேருந்து நிலையத்தினை அதி நவீன வசதிகளுடன் கூடிய வகையில் அமைக்கப்பட இருப்பதனையிட்டு மக்கள் பெரிதும் பெருமிதமடைகின்றனர்.
முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுதலின் அடிப்படையில் அமைக்கப்பட இருக்கும் இப்பேருந்து நிலையத்திற்கு நெக்டப் நிறுவனமானது நிதியுதவி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது
0 commentaires :
Post a Comment