10/30/2009
| 0 commentaires |
கெவிளியா மடு மீள்குடியேற்றம் தொடர்பான உயர்மடடக் கலந்துரையாடல்
கெவிளியா மடு சிங்கள, தமிழ் மக்கள் அங்கிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்திருந்தார்கள். இது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி ஏ.வாசுகி தலைமையில் புலுக்குணாவ பாலர் பாடசாலையில் இன்று இடம் பெற்றது. இதில் கடந்த காலத்தில் இடம் பெயர்நத தமிழ் சிங்கள் மக்களை மீண்டும் அப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்துவது தொடர்பாகவும், அவர்களின் ஜீபனோபயமான விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பாகவும் விரிவாக ஆரயப்பட்டது. அதாவது இப் பிரதேசங்களில் அக் காலத்தில் சுமார் 350 குடும்பங்கள் தமிழ் மக்கள் வாழ்ந்ததாக மக்கள் தெரிவித்தார்கள். அவர்கள் தற்போது இவ்விடங்களில் மீண்டும் குடியமபத்துவது தொடர்பாக ஆராயப்பட்டதோடு அதற்கான 10பேர் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது உரையில் குறிப்பபிடுகையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழல் தற்போது இல்லை. நாங்கள் அனைவரும் இனமத பேதங்களை மறந்து ஒருத்தருக்கொருவவர் அன்பு காட்டி வாழ வேண்டும். அத்தோடு தனிநபர்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை தனித் தனிநபர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக அதனை ஓர் இனப்பிரச்சினையாக மாற்றக் கூடாது. தற்போது எமது நாட்டிலே பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படடிருக்கின்றது. எனவே நாங்கள் எங்களது சொந்த இடங்களிலே இருந்து கொண்டு எமக்கே உரித்தான தொழில்களைச் செய்து கொண்டு எமது மாகாணத்தின் வளர்சியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இங்கு குடியேற்றப்படுகின்ற மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு அப் பிரதேசத்தில் நியமிக்கப் பட்டிருக்கின்ற குழுப்பிரதிநிதிகள் பொறுப்பாக இருந்து செயற்படுவார்கள். அத் தோடு இங்குள்ள பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரையினை ஒதுக்குவது தொடர்பாக பேசப்பட்டது. இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், அம்பாறை மாவட்ட அரச அதிபர், கிழக்கு மாகாண முதலமைச்சரின்; மீள் குடியேற்ற இணைப்பதிகாரி, முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர், கிராம சேiவை உத்தியோகஸ்த்தர்கள் அப் பிரதேச மக்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment