கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு உடனடியாக அகற்றப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி,ரெலோ, புளொட், ஈ. பி .டீ .பி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அகற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாதகாப்பு உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது. அதன் பின்னர் வழமை போல் மீண்டும் பாதுகாப்பு வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.தற்போது வழமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள்
0 commentaires :
Post a Comment