வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்; மற்றொருவர் காலை இழந்தார். அந்தப் பகுதியில் உள்ள மூன்று வீடு களில் ஒரு லட்சம் ரூபா பணம் மற்றும் 26 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட ஒருவரை அந்தப் பிரதேச மக்கள் வளைத்து முற்று கையிட்டனர்.
மக்களின் முற்றுகையை முறியடிக்க கொள்ளையன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தான். அதில் இதே இடத்தைச் சேர்ந்த இராமூர்த்தி புலேந்திரன் (வயது 36) என்பவர் கொல்லப்பட்டார். கொள்ளையனின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காலில் காயமடைந்த திருநாவுக்கரசு கிருபாகரன் (வயது33) என்பவர் வவுனியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அவரது கால் அகற்றப்பட்டதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவம் மருதங்குளம் பகுதியில் பெரும் பதற்றமான நிலையை உருவாக்கியுள்ளது.
0 commentaires :
Post a Comment