கௌரவ முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரனையுடன் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் தையல் பயிற்சியினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு இன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட் மணிபுரம் பாலர் பாடசாலையில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று எமது மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வேகமாக அபிவிருத்தியினை அடைந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப் புறங்கள் பாரிய அபிவிருத்தியினைக் கண்டு வருகின்றது. பாதைகள் விஸ்தரிப்பு, வீடுகள் அமைத்துக் கொடுத்தல், குடிநீர் பிரச்சினைகள்,பாடசாலை, பொதுவான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்பன இடம் பெற்று வருகின்றன.
ஏவ்வாறான அபிவிருத்தி இடம் பெற்றாலும் ஒவ்வொருவரினதும் தனிநபர் வருமானம் அதிகரிக்கப்டால் மாத்திரம் நாம் எதிர் பார்க்கின்ற அபிவிருத்தியினை அடையலாம். அத்தோடு மிகவும் முக்கியமாக பெண்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த்p அவர்களும் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுகின்றவர்களாக மாறுகின்ற போது குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை சீராக அமையும் எனவும் குறிப்பிட்டார். குறிப்பாக யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற இவ் மண்முனைப் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராமப் பெண்கள் மற்றும் ஆண்களின் தனிநபர் வருமானங்களை அதிகரிப்பது தொடர்பான செயற்றிட்டங்களை நாம் ஆராய்ந்து வருகின்றோம். எனவே மக்கள் அனைவரும் மிகவும் தெளிவாக இருந்து எமது வருமானங்களை நாமே ஈட்டிக் கொள்கின்ற வழிவகைகளையும் ஆராய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இன்று சுமார் 15 தையல் இயந்திரங்கள் கையளிக்க்பட்டது. இந் நிகழ்விற்கு மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர் கா.சுப்பிரமணியம், பிரதேச செயலாளர் கே.விமலநாதன், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் திருமதி ரீ.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment