10/20/2009

லெபனான் குண்டு வெடிப்புகளில் இஸ்ரேல் உளவுத்துறைக்கு சம்பந்தம்




லெபனானில் நடந்த குண்டு வெடிப்புகள் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டதென புலன் விசாரணைகளிலீடுபட்டிருந்த ஐ. நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லெபனானின் தென் பகுதியில் சென்ற ஞாயிற்றுக்கிழமை இரண்டு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.
காலை நேரம் குண்டுவெடித்த பின்னர் மாலையிலும் குண்டொன்று வெடித்தது. இதில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை.

லெபனானின் எல்லைக்குள் இஸ்ரேலிய உளவுப் பிரிவினரால் இக்குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதாகத் தெரிவித்த ஐ. நா. புலனாய்வுப் பிரிவினர் ஐ. நா. பாதுகாப்புச் சபையின் 1701வது சரத்தை மீறும் செயல் இதுவெனத் தெரிவித்தனர்.
2006ல் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் பாரிய சண்டை மூண்டபோது ஐ. நா. தலையிட்டு இதை நிறுத்தியது. அத்துடன் இரு தரத்தாரும் கடைப்பிடிக்க வேண்டிய சில நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் ஐ. நா. முன் மொழிந்தது.
இஸ்ரேல் விமானங்கள் லெபனானின் வான் எல்லைக்குள் நுழைகின்றமை, தரைமார்க்கமாக நுழைந்து தாக்குதல் திட்டங்களை வகுத்தல் என்பன ஐ. நா.வின் பாதுகாப்புச் சபை விதிமுறைகளை மீறும் செயலென அச்சபை சார்பாக லெபனான் குண்டுவெடிப்புகளை விசாரித்த அதிகாரிகள் கூறினர்.

0 commentaires :

Post a Comment