மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சீனித்தம்பி பாக்கியராஜா மட்டக்களப்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினராக இருந்து உள்ளுராட்சி சபைத்; தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியிருந்தார். இது தொடர்பில் கட்சியின் தலைவர் பணிமனைக்கு எதுவித முன்னறிவித்தலுமின்றி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கட்சியின் உயர் மட்டக் குழுவினால் இது தொடர்பில் குறித்த தவிசாளரிடமிருந்து விளக்கம் பல முறை கோரப்பட்டது. அதற்கு அவர் எதுவிதமான பதிலும் அளிக்கவில்லை. பின்னர் இது தொடர்பில் தவிசாளரினால் மட்டக்களப்பு நீதி மன்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு அண்மையில்(24.09.2009) விவாதத்திற்கு எடுக்கப்பட்டு அதற்கான தீர்ப்பும் அளிக்கப்பட்டது. அதாவது குறித்த வழக்காளி(தவிசாளர்) தமிழ் மக்கள் கட்சியின் உறுப்புரிமையினை இழந்ததோடு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் பதவியையும் இழந்தார் என அத்தீர்ப்பு அமைந்திருந்தது. அதன் பின்னர் தவிசாளர் சீனித்தம்பி பாக்கியராஜா அத் தீர்ப்பினை ஆட்சேபித்து மேன் முறையீடு செய்திருந்தார். அம் மேன்முறையீடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிக்கும், வழக்காளி தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிக்கும் இடையில் நீண்ட நேரம் வாதப்பிரதி வாதங்கள் இடம் பெற்றது. புpன்னர் இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது தவிசாளர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் தனக்கு தேர்தல் ஆணையாளரினூடாக மீண்டும் தவிசாளர் பதவி வழங்க வேண்டும் என.. இதனை நீதி மன்றம் நிராகரித்ததோடு, பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்டக் குழுவினர்க்கு தண்டப்பணமும் (அவர்களது பெறுமதியான நேரத்தை வீணடித்தமைக்காக) செலுத்த வேண்டும் என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.. பிரதிவாதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா உட்பட கட்சியின் தலைவர் பணிமனை முக்கிய உறுப்பினர்களும் பிரசன்னமாயிருந்தார்கள்
0 commentaires :
Post a Comment