பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதிலும் பிரிவினை வாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை என்றும் அதனையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியி ருப்பது நேற்றைய ‘தினகரனில்’ பிரதான செய்தியாக வெளியாகியிருந்தது.
பிரிவினைவாதத்திலிருந்தே பயங்கரவாதம் தோன்றியது. அதேபோல பயங்கரவாதத்தின் தோற்றுவாய் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் படாமையே பிரிவினைவாதம் தோன்றுவதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகின்றது.
இதில் உண்மை இல்லாமலில்லை. இனப் பிரச்சினை தீர்க்கப் படாததாலேயே பிரிவினைவாதம் தோன்றியது என வெறுமனே கூறுவதில் அர்த்தமில்லை. இது சில தலைவர் களின் தப்பித்தல்வாதப் பேச்சு. இனப் பிரச்சினை தீர்வி ன்றித் தொடர்வதற்கு யார் பொறுப்பாளிகள் என்றும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
இனப் பிரச்சினை தீர்க்கப் படாததற்குச் சிங்களத் தலைவர்களே பொறுப்பாளிகள் என்று அன்றைய தலைவர்கள் முதல் இன்றைய சம்பந்தன் வரை கூறி வந்ததை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.
காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைவர்கள் இனப் பிரச்சினையின் தீர்வில் போதியளவு அக்கறை செலுத்தவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற அணுகுமுறையும் செயலீடுபாடின்மையும் இனப் பிரச்சினை தீர்வின்றித் தொடர்வதற்கான பிரதான காரணங்கள் என்ற உண்மை யிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது.
பிரச்சினையின் தீர்வுக்குப் பொருத்தமான அணுகுமுறையைத் தமிழ்த் தலைவர்கள் பின்பற்றவில்லை. ஓரளவாவது தீர்வு கிடைக்கக் கூடியதாக இருந்த சந்தர்ப்பங்களைப் பிழையான அணுகுமுறையைப் பின்பற்றியதன் மூலம் கைதவற விட்டார்கள்.
தங்கள் இயலாமையை மூடி மறைப்பதற்காக இவர்கள் நிறை வேற்றிய தனிநாட்டுத் தீர்மானம் இனப் பிரச்சினையைச் சிக்கலாக்கியது. இறுதியாகப் புலிகளின் தனிநாட்டுப் பாதையிலே பயணித்ததன் மூலம் தமிழ் மக்களுக்குச் சொல் லொணாத் துன்பம் நேர்வதற்குக் காரணமாக இருந்தார்கள்.
புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். தனிநாடு நடைமுறைச் சாத்தியமற்றதென்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க ப்பட்டுவிட்டது. புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இன்றைய அரசியல் களத்தில் செயற்பட முன்வந்துள்ள போதிலும் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டுவிட்டதாக இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், பிரிவினை வாதம் இன்னும் வாழ்கின்றது என்ற அபிப்பிராயம் அரசாங்க மட்டத்தில் தோன்றுவது இயல்பானதே.
இனப் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கையில் தீர்வுகாண முடியு மேயொழியத் தனிநாடு சாத்தியமில்லை என்ற யதார்த்தத் தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் விளங்கிக்கொண்டு செயற்படுவதன் மூலமே இனப் பிரச்சினையின் தீர்வில் அவர்கள் பங்காளிகளாக முடியும்.
பிரிவினைவாதத்தைத் தோற்கடிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது என ஜனாதிபதி கூறியிருப்பதை அனுகூல வாதக் கண்ணோட்டத்தில் பார்ப்போமேயானால், இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காணும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். தமிழ்த் தலைவர்கள் இச்சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
இப்போது கிடைக்கும் தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷையை முழுமையாகப் பூர்த்தி செய்வதாக இல்லாதிருக்கலாம்.
ஆனால் முழுமையான தீர்வை அடைவதற்கான முதல் படியாக நிச்சயமாக அமையும். முழுமையற்ற எந்தத் தீர்வை யும் ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு தமிழ் மக்களை எத்தகைய துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று ஒருகணம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியவர்களாகவே தமிழ்த் தலைவர்கள் உள்ளனர்.thinakaran-edito
0 commentaires :
Post a Comment