10/07/2009

← படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்


அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்பகுதிகளின் வீதிகள் மிகவும் விஸ்தரிக்கப்பட்டு அபிவருத்தியடைந்து வருகின்றது. அதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பின் பிரதான பாதை அகலமாக்கப்பட்டு புதிய பாதை அமைக்கும் பணிகள் தற்போது இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. தற்போது பிள்ளையாரடியிலிருந்து 5ம் கட்டை வரையுள்ள 14கி.மீ பிரதான வீதி 20.08மீற்றர் அகலமாக்கி புதிய வீதி செப்பனிடும் வேலை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. பாதையின் இரு மருங்கிலும் உள்ள கடைகள் ,வீதிகள் என்பன அகற்றப்பட்டு பணிகள் இடம் பெறுகிறது.
இது தொடர்பில் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ஓரிரு பிரச்சினைகள் தோன்றியிருந்தது. இதனை மட்டக்களப்பு மாநகர மேயர் தலைமையில் கூடிய கூட்டத்தில் அம்மக்களுக்கு பூரண விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அம்மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதன் போது மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பரபாகரன் திருமலை வீதியில் (மட்டக்களப்பு பஸ் டிப்போக்கு முன்பாக) இருக்கும் தனது வீட்டு மதிலை முதலாவதாக உடைப்பதாக அனைவர் மத்தியிலும் குறிப்பிட்டார். அதன் போது மக்கள் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால் இன்று நடந்திருப்பது என்ன? சாதாரண பொது மக்கள் மற்றும் பொது நல அமைப்புக்கள் ,பாடசாலைகள் ,பொலிஸ் நிலையங்கள் என்பன எல்லாம் உடைக்கப்பட்டு வீதிகள் செப்பனிடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த மேயர் அம்மையார் மட்டும் உடைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றார். அதென்ன? அவடை மட்டும் சொத்து மக்களின்ற எல்லாம் குப்பையா?
சில மக்கள் தங்களது கடையின் முழுப்பகுதிகளையும் உடைத்திருக்கின்றார்கள் சிலர் தங்களது வீட்டின் முழுப்பகுதிகளையுமே உடைத்திருக்கின்றார்கள். இப்படியெல்லாம் இருக்கும் போது இந்த மேயர் அம்மா மட்டும் தனது பொறுப்பினை தட்டிக்களித்து தனது வீட்டின் ஒரு பகுதியினை உடைக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்.? எனவே தயவு செய்து நாங்கள் எங்களது வீடு மற்றும் கடைகளை எல்லாம் உடைத்த மாதிரி இந்த மேயரும் உடைக்க வேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் கடும் நடவடிக்கையில் இறங்குவோம்.


இப்படிக்குபாதிக்கப்பட்ட மட்டக்களப்பு திருமலை வீதி மக்கள்.

0 commentaires :

Post a Comment