ஆயுதப்பயிற்சி பெற்றவர்களுக்கு மறுவாழ்வளிப்பதென்பது முக்கிமாகும். அதனால்தான் அவர்களை அதிலிருந்து விடுபடச் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் இவர்களுக்கான சுய தொழில் உபகரணங்கள் வழங்கி இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றி ஆராய்ந்து முடிவுகளை எடுத்ததன் அடிப்படையில் இன்று இவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதியும் இதற்கான அனுமதியினை வழங்கியிருந்தார். அடைய நினைத்த இலக்கை அடைய முடியவில்லை. அதில் பல சவால்கள் இருந்தன, வெளிநாடு செல்ல வேண்டும் என்றும் அரசியல் நியமனங்களையும் சிலர் பெறவேண்டும்மென்று நினைத்தனர். இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக IOM நிறுவனத்துடன் நடாத்திய கலந்துரையாடலின் அடிப்படையில் இவ் உதவிகள் இன்று வழங்கப்படுகின்றன.கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட 12000 விதவைகள் இருக்கின்றனர். இவர்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றன இவர்களுக்கு உதவவேண்டியதும் அவசியம் என்றும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment