நேற்று (20.10.2009) இரவு 7.30 மணியளவில் ஆரையம்பதியில் அமைந்துள்ளslfp
அலுவலகம் மீது மக்கள் கல்வீசி தமது எதிர்ப்பபை தெரிவித்துள்ளார்கள். அண்மையில் ஆரையம்பதியில் திறக்கப்பட்ட
அலுவலகத்திற்கு பூரண எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்து வந்திருந்தனர். எந்த ஒரு உதவியும் செய்யாமல் பயனற்று இருக்கின்ற இவ்வலுவலகம் எமக்கு தேவையில்லை என மக்கள் கடும் விசனம் தெரிவித்து வந்த வேளையில் நேற்று இரவு ஆத்திரமடைந்த பொது மக்கள் கற்களால் வீசி அவ் வலுவலகத்தை அகற்றும்படி செய்திருக்கிறார்கள். இப்பிரச்சனை காத்தான்குடி பொலிசாருக்கு எட்டியதை அடுத்து இஸ்த்தலத்திற்கு விரைந்த பொலிசார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர். மேற்படி அலுவலகமானது ஆரையம்பதி பிரதான வீதியில் ஒருவரது வீட்டில் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment