10/30/2009

கிழக்கில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை:வரட்சி நிலையில் மாற்றம்




மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட கால வரட்சிக்குப் பின்னர் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது.இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 45.2 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார்.

புதியகாத்தான்குடி,நாவற்குடா,பூம்புகார்,சொறிக்கல்முனை,வெல்லாவெளி,குருக்கள்மடல் உட்பட பல பகுதிகளில் வீதிகளிலும், விளையாட்டு மைதானங்கள், பள்ளமான பகுதிகளிலும் நீர் தேங்கியுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 6 மாதங்களாக இம்மாவட்டத்தில் வரட்சி நிலவியமையால் றூகம் குளம் உட்பட பல பயிர் செய் நிலங்கள் நீரற்று வரண்டு காணப்பட்டன. இதனால் வேளாண்மை பாதிக்கப்பட்டிருந்தது.அத்துடன் கிணறுகள் வற்றியமையால் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவியிருந்தது.

எதிர்வரும் சில நாட்களுக்கு இம்மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யுமென மாவட்ட வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

0 commentaires :

Post a Comment