சமுகத்தின் நிலை உயரவேண்டுமானால் அடிப்படையில் கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டும். கல்வி அறிவு மேம்படும் போது ஜனநாயகத் தன்மையும் நம்பிக்கையும் மேலோங்கும். கிராமப்புறங்கள் தொடர்ந்து கிராமப்புறங்களாகவே மாறிக்கொண்டிருப்பதற்கும் இதுவே காரணம் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ. பிரசாந்தன் குறிப்பிட்டார்.இவர் மேலும் குறிப்பிடுகையில் அரச அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் சமூகத்தினையும் தங்களையும் பிரித்துப் பார்க்காமல் தாங்களும் சமுகம் என்ற நிலைக்குள் வரவேண்டும் தங்களது பிள்ளைகளை கிராமப்புற உள்ளுர் பாடசாலைகளில் கல்வி கற்க அனுமதிக்கவேண்டும் உள்ளுர் வைத்திய சாலைகள் தபாலகங்கள் பொதுச் சந்தைகள், கடைகள், காரியாலயங்களை பாவிக்கத் தொடங்குவார்களாக இருந்தால் கிராமப்புற மக்களின் தேவையினை உணர்ந்து கொள்ளமுடியும் அபிவிருத்தியின் நிலைப்பாடும் புரியும் எனவும் குறிப்பிட்டார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விஸ்வ கலா கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 25.10.2009 அன்று அரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட நிகழ்வின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அநேகமான ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தாங்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலையில் அனுமதிக்காமல் நகர்ப்புற பாடசாலைகளில் அனுமதிக்காக காத்துக்கிடப்பது நல்ல உதாரணம். இவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்காத தன்மையினை இது எடுத்துக்காட்டுகின்றது. இதுபோல் ஊர் தலைவர்களும் தாங்கள் சார்ந்தவர்களை நகர்புறம் நோக்கி இடம் நகர்த்தும் நிலை மாற வேண்டும் இல்லையேல் என்றும் ஏற்றத்தாழ்வான சமூகத்தினை மாற்ற முடியாமல் சென்றுவிடும். ஆசிரியர் இடமாற்றங்களில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் மாணவர்களின் கல்வியில் கவனம் கொண்டு செயற்படுவது போன்று அனைத்து ஆசிரியர்களும், தலைவர்களும் செயற்பட வேண்டும் எனவும் கேட்டக்கொண்டார்.
Categories: செய்திகள்
Tags:
-->
0 commentaires :
Post a Comment