கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வரட்சி நீங்கி மழை வேண்டி மாகாணத்தின் பல பாகங்களிலும் மத ரீதியான வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இம் மாகாணத்தில் நிலவும் வரட்சி நிலை காரணமாக எதிர்வரும் பெரும் போக வேளாண்மைச் செய்கையும் பாதிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.பெரும் போக வேளாண்மைச் செய்கைக்காக வயல் நிலங்களில் உழவு வேலைகள் தற்போது முடிவடைந்துள்ள போதிலும் மழை இன்மையினால் விதைப்பு வேலைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இன்று காத்தான்குடி மற்றும் ஏறாவுர் ஜம் இயத்துல் உலமா சபைகளின் ஏற்பாட்டில் மழை வேண்டி நடைபெற்ற விசேட தொழுகையில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.காத்தான்குடியில் கடற்கரையிலும் ஏறாவுரில் அகமட் பரீட் விளையாட்டு மைதானத்திலும் நடை பெற்ற விசேட தொழுகையின் போது மழை வேண்டி விசேட து ஆப் பிரார்த்தனையும் நடைபெற்றது.
10/12/2009
| 0 commentaires |
கிழ. மாகாணத்தில் வரட்சி காரணமாக மழை வேண்டி விசேட பிரார்த்தனைகள்
கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வரட்சி நீங்கி மழை வேண்டி மாகாணத்தின் பல பாகங்களிலும் மத ரீதியான வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இம் மாகாணத்தில் நிலவும் வரட்சி நிலை காரணமாக எதிர்வரும் பெரும் போக வேளாண்மைச் செய்கையும் பாதிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.பெரும் போக வேளாண்மைச் செய்கைக்காக வயல் நிலங்களில் உழவு வேலைகள் தற்போது முடிவடைந்துள்ள போதிலும் மழை இன்மையினால் விதைப்பு வேலைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இன்று காத்தான்குடி மற்றும் ஏறாவுர் ஜம் இயத்துல் உலமா சபைகளின் ஏற்பாட்டில் மழை வேண்டி நடைபெற்ற விசேட தொழுகையில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.காத்தான்குடியில் கடற்கரையிலும் ஏறாவுரில் அகமட் பரீட் விளையாட்டு மைதானத்திலும் நடை பெற்ற விசேட தொழுகையின் போது மழை வேண்டி விசேட து ஆப் பிரார்த்தனையும் நடைபெற்றது.
0 commentaires :
Post a Comment