10/30/2009

ஜீ.எஸ்.பி+ சலுகையை மேற்கத்திய நாடுகள்வளர்முக நாடுகளைத் தங்கள் காலடிக் குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்துகின்றன

இன்று அரசியல் அரங்கில் பிரதான பேசுபொருளாக இருப்பது ஜீ.எஸ்.பி+ சலுகை. இச் சலுகை நிறுத்தப் பட்டால் நாடு மீள முடியாத நெருக்கடிக்குள் தள்ளப் படும் என்ற வகையில் எதிரணியினர் பிரசாரம் செய்கின் றனர்.

ஜீ.எஸ்.பி+ சலுகை நிறுத்தப்பட மாட்டாது என்றும் அது நிறுத்தப்பட்டாலும் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற் படாத வகையில் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் கூறுகின்றது.

ஜீ.எஸ்.பி+ சலுகை தொடர்பான வாதவிவாதங்கள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. எதிரணித் தலை வர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் மடுவை மலை யாக்கித் தெரிவிக்கும் கருத்துகள் ஆரோக்கியமானவைய ல்ல. இச் சலுகை ஒரு வரப்பிரசாதம்.

இது இல்லாவிட் டால் எல்லாமே முடிந்துவிட்டது என்றாகாது. அதற்கேற்ற விதத்தில் திட்டமிட்டுப் பொருளாதாரத்தை முன்னெடுத் துச் செல்வது சிரமமான காரியமல்ல.

கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமைகள் தோன்றின. சரியான திட்டமிடலின் அடிப்படையில் செயற்பட்டு அன் றைய அரசாங்கங்கள் நாட்டை முன்னெடுத்துச் சென்றன. கல்ரெக்ஸ், ஷெல் போன்ற வெளிநாட்டுக் கம்பனிகள் பெட்ரோலிய வர்த்தகத்தில் ஏகபோகம் வகித்த நிலையை மாற்றி, பெட்ரோலிய விநியோகத்தை அரசுடைமை ஆக் கிய போது வெளிநாட்டுக் கடனுதவி நிறுத்தப்பட்டது.

அத னால் நாடு மூழ்கிவிடவில்லை. அன்றைய அரசாங்கம் சரியான திட்டமிடலுடன் செயற்பட்டதால் அப்பாதிப்பைத் தவிர்த்து முன்னேற முடிந்தது. வெளிநாட்டவர்களின் பெரு ந்தோட்டங்களைத் தேசவுடைமை ஆக்கிய காலத்திலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது.

இலங்கைத் தேயி லையை ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்ய முடி யாது என்றும் அதனால் நாட்டின் பொருளாதாரம் மோச மாகப் பாதிக்கப்படும் என்றும் அன்றைய எதிரணியினர் பிரசாரம் செய்தார்கள். ஆனால் நாடு மூழ்கிவிடவில்லை பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

ஜீ.எஸ்.பி+ சலுகையை மேற்கத்திய நாடுகள் இலங்கைக்கு எதிரான ஆயுதமாகவே பயன்படுத்துகின்றன. இலங்கை யில் மனித உரிமைகள் மீறப்படுவதால் இச் சலுகையை நிறுத்த வேண்டும் என்று அந்நாடுகள் கூறுவதொன்றும் புதுமையானதல்ல. வளர்முக நாடுகளைத் தங்கள் காலடிக் குள் வைத்திருப்பதற்காக மனித உரிமை பற்றிப் பேசுவது மேற்கத்திய நாடுகளுக்கு வழக்கமாகிவிட்டது.

தங்களு டன் ஒத்துப்போகும் நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை இவை கண்டுகொள்வதில்லை. தங்கள் தாளத்துக்கு ஆடாத நாடுகளில் மனித உரிமை மீற ல்களைக் ‘கண்டுபிடிக்கின்றன’.

ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் பீப்பாக் குண்டுகளைப் போட்டுப் பெருந்தொகையானோரைக் கொன்று குவித்த போது இந்த மேற்கு நாடுகளுக்கு மனித உரிமை மீறல்கள் தென்படவில்லை. அந்த அர சாங்கத்துக்கு இந்நாடுகள் கோடி கோடியாக நிதியுதவி வழங்கின.

மேற்கத்திய நாடுகளைப் போலவே இலங்கையின் எதிரணிக் கட்சிகளும் ஜீ.எஸ்.பி+ சலுகையை அரசாங்கத்துக்கு எதி ரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. இந்தப் பிரசாரத்தில் இக் கட்சிகள் மக்கள் மத்தியில் அச்ச உண ர்வு தோன்றும் விதத்தில் செயற்படுவது கண்டனத்துக்குரி யது.

ஜீ.எஸ்.பி+ சலுகையைப் பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இச் சலுகையை நிறுத்துவதால் இலங்கை க்கு மாத்திரம் பாதிப்பு என்றில்லை. ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களுக்கும் பாதிப்பு உண்டு. எனவே இவ்விடய த்தில் ஐரோப்பிய நாடுகள் அவசரப்பட்டு முடிவெடுக்கப் போவதில்லை.

மேலும், இச் சலுகை நிறுத்தப்படுமாயின் அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கோ மக்களுக்கோ பாதிப்பு ஏற்படாதிருப்பதற்கான சகல முன்னேற்பாடுக ளும் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கூறு வது நம்பிக்கையூட்டுகின்றது.




0 commentaires :

Post a Comment