10/28/2009

யாழ். மாநகரம் இரண்டு ஆண்டுகளில் முழுமையாக அபிவிருத்தி



யாழ்ப்பாண மாநகரத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதாக யாழ்.
மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தினகரனுக்குத் தெரிவித்தார். தமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்களது ஆதரவினையையும் பெற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி செயற்றி ட்டங்களுக்குப் பற்றாக்குறையாக வுள்ள ஆளணி வளத்தைப் பூர்த்தி செயற்வதற்கு முதற்கட்டமாக நடவடிக்கை எடுத்துள்ளதோடு நகர சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள வென ஆறு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு ள்ளன. அதேநேரம் மாநகர சபையில் அடுத்த இரண்டு நாட்களுக்குள்
100 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பகுதி, வேலைப் பகுதி, சுகாதாரப் பகுதியென 100 பேரும் கடமையில் அமர்த்தப்படுவார்கள். ஆளணிப் பற்றாக்குறை தொடர்பாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தெரிவித்த யாழ்.
முதல்வர் கலாசார பிரிவு, தீயணைப்புப் படைப் பிரிவு ஆகியவற்றை உருவாக்கி மேலும் 150 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைக் கட்டடத்தை பழைய இடத்திலேயே (சுப்பரமணியம் பூங்காவில்) மீள நிர்மாணிப்பதற்கு 100 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறிய யாழ். முதல்வர் திருமதி யோகேஸ்வரி, இந்நிதியைத் திரட்டுவதற்காகப் புலம்பெயர் தமிழர்களின் பூரண ஆதரவை எதிர் பார்ப்பதாகவும் கூறினார்.
தவிரவும் திறந்த வெளியரங்கை அமைப்பதற்காக 50 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளா ரென்றும் அவர் தெரிவித்தார்.
நல்லூர், முத்திரைச் சந்தியில் பொழுது போக்குப் பூங்காவொன்றை அமை க்கவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment