சிறுவர்களை ஆயுதமேந்தவைத்து அவர்களின் அடிப்படை உரிமை களை இல்லாதொழித்த யுகத்துக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள் ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னி ட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி யிலேயே அவர் இவ்வாறு குறிப்பி ட்டுள்ளார்.
அச் செய்தியில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது;
மூன்று தசாப்த கால பயங்கர வாதத்தை தாய்நாட்டிலிருந்து முற்றாக ஒழித்த இலங்கையர்கள் என்ற பெருமையுடன் இம்முறை உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது.
மூன்று தசாப்தங்களாகத் தொடர் ந்த பயங்கரவாதத்தினால் எமது நாட் டில் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட வர்கள் சிறுவர்களும் பெண்களுமே. எமது பிள்ளைகளின் வாழ்விடங் களும் இல்லாதொழிந்தன.
படை வீரர்கள் தமது உயிரைப் பலியாக்கி வெற்றிகொண்ட தேசத்தினை நமது பிள்ளைகளுக்காகக் கட்டியெழுப்பு வது நமது பொறுப்பாகும். சகல சிறுவர்களுக்கும் அன்பு, பாதுகாப்பு, அரவணைப்புடன் சிறந்த எதிர்கால மொன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கும் பெரியவர்களான நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
‘வெற்றிபெற்ற தேசத்தை சிறார்களுக்காக கட்டியெழுப்புவோம்’ என்ற தொனியில் இம்முறை உலக சிறுவர் தினம் அனுஷ் டிக்கப்படுகிறது. இதற்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலை யில் போதைப்பொருள் மற்றும் வறுமை என்பன சிறுவர் முன்னேற்றத்தில் பெரும் தடையாகவுள்ளன. பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போல் இந்த சவாலையும் வெற்றிகொள்ள ஒன்றிணைவோம் எனவும் ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 commentaires :
Post a Comment