10/25/2009

முதலமைச்சர் சந்திரகாந்தனின் கிளிவெட்டி மக்களுடனான கலந்துரையாடல்


கிழக்குமாகாண முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் அவர்கள் நேற்றைய தினம் (23.10.09) கிளிவெட்டிவாழ் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார். கிளிவெட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமான கருத்தரங்கு மாலை 6.00 மணிவரை இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் முதலமைச்சருடன் திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பாளர் யூடி தேவதாசன், த.ம.வி.புலிகளின் ஊடகப்பேச்சாளர் அசாத் மெளலானா, மற்றும் மட்டுநகர் மாவட்ட அமைப்பாளர் பிரசாந் ஆகியோர் இன்றைய அரசியல் நிலைதொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறினர். இவர்களுடன் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கில் கிளிவெட்டி வாழ் மக்களின் இன்றைய அத்தியாவசிய தேவைகள்பற்றி அம்மக்கள் பலரால் எடுத்துரைக்கப்பட்டது. முக்கியமாக கிளிவெட்டி வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை மற்றும் குடிநீர் தட்டுப்பாடுபோன்ற பல குறைபாடுகளை மக்கள் சுட்டிக்காட்டினர். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் வைத்தியசாலையின் குறைபாட்டினை விரைவில் தீர்த்து வைப்பதாகவும், குடிநீர் பிரச்சினையினை அடுத்தவருட நடுப்பகுதியில் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேற்படி கருத்தரங்கு நிறைவு பெற்றதும் கிளிவெட்டி கிராமத்திற்கு அண்மையிலுள்ள குமாரபுரத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள சம்பூர், கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களில் எற்கனவே வாழ்ந்து இன்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை முதலமைச்சர் மேற்கொண்டார்


0 commentaires :

Post a Comment