கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர், பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொணடார். கிழக்குப் பல்கலைக் கழகம் எதிர் கொள்கின்ற சவால்கள் மற்றம் மற்றும் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான எதிர்காலத்திட்டங்கள் என்பன தொடர்பாகவும் பல்கலைக் கழகத்தின் உடனடித் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆரயப்பட்டது. அத்தோடு கிழக்கு பல்கலைக் கழகமானது கிழக்கு மாகாணத்தின் மிகவும் பெரிய ஓர் சொத்தாகும். இதனைப் பாதுகாக்க வேண்டி பாரிய பொறுப்பு கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் வாதியான தனது கடமையாகும் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப் படுகின்ற ஆய்வுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. மேலும் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற வளங்கள் இனங்காணப்பட்டு அது தொடர்பான பல ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் அதற்கான நிதியினை வழங்குவதற்கான நடவடிக்கையினை தாம் மேற்கொள்வதாகவும் கிழக்குமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் விசேடமாக கலாச்சாரத்தினைப் பிரதிபலிக்கின்ற சான்றுகள் தொடர்பான தொல்பொருள் ஆய்வுகள், கிழக்கு மாகாணத்திற்கான உண்மையான எல்லை நிர்ணயம், மாகாணத்தின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரையான குடிசனப்பரம்பல் மற்றும் வளர்ச்சி வீதம், கிழக்கு மாகாணத்தின் வெகுவாகப் பாதிக்கபட்ட ஓர் நோயாகக் கருதப்படுகின்ற புற்று நோய்க்கான காரணங்கள் தொடர்பான ஆய்வுகள் அத்தோடு விவசாயம் ,மீன்பிடி, உல்லாசம், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
0 commentaires :
Post a Comment