10/21/2009

இன நல்லிணக்க அமைச்சின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை பத்து சதம் நிதி கூட மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படவில்லை



மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு இன நல்லிணக்க அமைச்சின் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இதுவரை பத்து சதம் நிதி கூட மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிறுவனங்கள் மற்றும் பொதுநல அமைப்புக்களின் நிதி மூலம் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழாக்களிலேயே அமைச்சராக இருக்கும் முரளிதரன் அதிதியாக கலந்து கொண்டு வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா தெரிவித்தார்.
எதிர்காலத்திலாவது தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி மூலங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். மட்டக்களப்பு சித்தாண்டி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பு ஒன்றின்போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Categories: செய்திகள்

Tags:

-->

0 commentaires :

Post a Comment