10/01/2009

தசராவுக்குப் போட்டியாக தலித்துகள் நடத்திய ராவண மேளா


தசரா விழாவில் ராவணனின் கொடும்பாவிகளை எரிப்பதைக் கண்டித்து உ.பி. மாநிலம் கான்பூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ராவண மேளா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை வேந்தனான ராவணன், ராமாயணத்தில், மோசமானவனாக சித்தரிக்கப்பட்டுள்ளான். ஆனால் அவன் தீரமும், தியாகமும், கடவுள் பக்தியும் மிக்கவன் என்று உ.பி. மாநில தலித் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆண்டுதோறும் தசராவின்போதும், ராம் லீலாவின்போதும் ராவணனின் கொடும்பாவிகளை எரிப்பதைக் கண்டித்து தலித் பாந்தர் அமைப்பின் சார்பில் உ.பியில், ராவண மேளா நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
கான்பூரில் உள்ள புக்ரயா என்ற இடத்தில் இன்று ராவண மேளா நடந்தது. இந்த நிகழ்ச்சி குறித்து தலித் பாந்தர் அமைப்பின் தலைவர் தனிராம் பெளத் கூறுகையில், ராவணனின் கொடும்பாவிகளை எரிப்பது தலித் மக்களின் மனங்களை புண்படுத்துவதாக உள்ளது. இந்த செயலுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்றார்.
கடந்த பத்து ஆண்டுகளாக இப்பகுதியில் ராவண மேளா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment