10/30/2009

அம்பாறை மாவட்ட பெண்களின் வாழ்வாதரத்தினை உயர்த்துவதற்காக சுயதொழில் முயற்சி





கிழக்கு மாகாணத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்பங்களுக்கு தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் ஆக இருக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கான தொழில் வாய்ப்பானது எதுவுமே கிடையாது. எனவேதான் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது அமைச்சின் கீழ் வருகின்ற கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக குறித்த பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கி அதற்கான தொழில் உபகரயங்களும் வழங்கப்பட்டு வருகின்றன். அதன் ஓர் கட்டமாக இன்று அம்பாறை மாவட்டத்தின் குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள சுமார் நாற்பது பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்ளுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வி. சுத்தியசீலன் தலைமையில் முதலமைச்சரின் அம்பாறை மாவட்ட உப அலுவலகத்தில் இடம் பெற்றது. இதில் பயிற்சினை முடித்த பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் சந்திரகாந்தன் தனது உரையில், எமது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பெண்களிலே அதிகமானவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்தவர்களே அதிகமானோர் இருக்கின்றார்கள். இவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான ஓர் வழியாக கிராமிய அபிவிருத்தியின் ஊடாக அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு எமது அமைச்சின் ஊhடாக பல மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறைப் படுத்தப்ட்டு வருகின்றது. அதன் ஓர் கட்டம் தான் தையல் பயிற்சி அளித்து அவர்களுக்கான தையல் உபகரணங்களும் வழங்கும் நிகழவாகும். இதன் ஊடாக அவர்களது தங்களது வருமானங்களை தாங்களே ஈட்டிக் கொள்ளக் கூடிய ஓர் சந்தர்ப்பத்தினை உருவாக்கி கொடுத்திருக்கின்றோம். எனவே அதனைப் பெறுகின்ற ஒவ்வொருவரும் தங்களது வருமானங்களை தாமே ஈட்டி எமது சமூகத்தில் உயர்நத ஓர் இடத்தினை வகிப்பதோடு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியிலும் பங்குதாரர்களாக மாற வேண்டு; எனக் கேட்டு;க் கொண்டார்.

0 commentaires :

Post a Comment