10/29/2009

முஸ்லிம் நாடுகளில் நிலவும் வன்முறைகள் வெளிநாட்டு முகவர்களால் திட்டமிடப்படுகின்றன


ஈரான் ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமய்னி



முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் வன்முறைகள், தாக்குதல்களை வெளிநாட்டு முகவர்கள் மறைமுகமாகத் திட்டமிட்டு நடத்துவதாக ஈரான் ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமய்னி தெரிவித்தார்.
ஈரானிலிருந்து இம்முறை புனித ஹஜ்ஜிக்குச் செல்வோருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆயதுல்லா அலி கொமய்னி இதைக் கூறினார்.
பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் மோதல்களால் முஸ்லிம் சகோதரர்கள் பலியாகின்றனர். ஷியா சுன்னி முஸ்லிம் பிளவுகளை ஆழமாக்கி எமது எதிரிகள் முஸ்லிம் சமூகத்தைக் கூறுபோடுகின்றனர்.
அண்மையில் ஈரானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலும் வெளிநாட்டு முகவர்களின் கைவரிசையென்றும் ஆயதுல்லா அலி கொமய்னி சுட்டிக்காட்டினார்.
புனித ஹஜ் கடமைக்காக மக்கா செல்வோர் எமது எதிரிகளுக்கு நமது ஒற்றுமையைக் காட்டவேண்டும். முஸ்லிம் உலகுக்கெதிராகப் புரியப்படும் சதித் திட்டங்களை முறியடிக்கும் உள்ளுணர்வும் ஒற்றுமையும் ஹஜ் கடமைகளில் வெளிவரவேண்டுமென்றும் ஆயதுல்லா அலி கொமய்னி குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment