சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேயன்றி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அல்ல என்று கனடா நெஷனல் போஸ்ட் ஆங்கிலப் பத்தி ரிகை தெரிவித்துள்ளது.
இந்தப் பரிசை அமெரிக்க ஜனாதி பதிக்கு வழங்குவது வேடிக்கையான விடயம் என்றும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி எதிர்காலத் தில் ஆற்ற விருக்கும் பணிகளுக் காகவே இப் பரிசு இப்போது வழங்கப்படுவதாக அப் பத்திரிகை யின் ஆசிரியர் ஜொனதன் கேனியா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி சமாதான த்திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்பதை செயற்பாடு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் என் றும் அப்பத்திரிகை தெரிவித்திருக் கின்றது.
மூன்று தசாப்தங்களாக இலங்கை குடி மக்கள் முகம் கொடுத்த குரூரமான பயங்கரவாதத்திலிருந்து அம் மக்களை விடுவித்து, அவர்க ளுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடு த்திருப்பதற்காக அவர் இப் பரிசுக்குரிய தகுதியைப் பெற்றிருக் கின்றார் எனவும் அப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
0 commentaires :
Post a Comment