வாழைச்சேனை பிரதேசத்தில் நேற்றிரவு பிரம்படித்தீவு - கின்னையடி ஆற்றில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பூலாக்காட்டைச் சேர்ந்த 19 வயதான நடராஜா வில்வன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையே படகு சேவை நடைபெற்று வருகின்றது. தற்போது கின்னையடி விஷ்னு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பூலாக்காடடைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நீந்தி ஆற்றைக் கடந்து ஆலய உற்சவத்திற்கு சென்றதாகவும்,இருவர் மறு கரையை அடைந்த போதிலும் மூன்றாவது நபர் பற்றிய தகவல் இல்லாத நிலையில் இன்று காலை தேடிய போதே அந் நபர் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
0 commentaires :
Post a Comment