தென் மாகாண சபைத் தேர்தல் நேற்று (10) சனிக்கிழமை அமைதி யான முறையில் நிறைவடைந்துள் ளது.
காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை வாக்குப் பதிவு இடம்பெற்றது. காலையில் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தபோதிலும் முற்பகல் 11 மணிக்குப் பின்னர் சுறுசுறுப்படைந்தது. மக்கள் ஆர்வ முடன் வந்து வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இதன்படி மூன்று மாவட்டங்களிலுமாக 65% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவி த்தனர்.
காலை 10 மணியளவில் காலி மாவட்டத்தில் 15% வாக்குப் பதி வும் மாத்தறை மாவட்டத்தில் 20% வாக்குப் பதிவும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 25% வாக்குப் பதிவும் இடம்பெற்றன. நண்பகல் 12 மணியளவில் மூன்று மாவட்ட ங்களிலும் முறையே 22%, 35%, 37% வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிரு ந்தன. அம்பாந்தோட்டை மாவட்ட த்திலேயே கூடுதலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்களிப்பின் போது எதுவித மான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லையெனப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் வேட்பாளர் ஒருவருக்காக வாக்குச் சாவடி அருகில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த மூவரை பொலிஸார் கைதுசெய்ததாகப் பேச்சாளர் குறிப் பிட்டார்.
நேற்றைய தேர்தலில் பாதுகாப்புக் கடமைகளுக்கென படையினருக்கு மேலதிகமாகப் பொலிஸார் ஈடுபடு த்தப்பட்டிருந்தனர். வாக்குச் சாவடி களுக்கும் பொதுமக்களுக்குமாகப் பாதுகாப்பு வழங்கவென சுமார் ஏழாயிரம் பொலிஸார் அமர்த்தப்ப ட்டிருந்தனர். இது தவிர தேர்தல் கடமைகளில் சுமார் பத்தாயிரம் அதிகாரிகள் கடமையாற்றினர். மாலை நான்கு மணிக்கு வாக்குப் பதிவு
நிறைவடைந்ததன் பின்னர் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பான முறையில் எண்ணும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 21 தொகுதிகளில் உள்ள 17,61,859 பேர் வாக்களிக்கவென 1485 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற முதலாவது தேர்தலில் ஜனாதிபதியும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜ பக்ஷவும் வாக்களித்தார்கள்.
வாக்களிக்கச்சென்ற ஜனாதிபதி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக் கவும் தவறவில்லை. ஜனாதிபதித் தேர்தலா, பாராளுமன்றத் தேர்தலா முதலில் நடைபெறும்? எனக் கேள்வி எழுந்துள்ளதாகவும் அதுபற்றித் தீர்மா னிப்போம் எனவும் அவர் குறிப் பிட்டார்.
இதேவேளை, வாக்குகளை எண்ணு வதற்காக 168 நிலையங்கள் அமை க்கப்பட்டுள்ளன. இதில் தபால் மூல வாக்குகள் 15 நிலையங்களில் எண்ணப்படுகின்றன. தபால் மூலம் 85% வாக்களிக்கப்பட்டதாகத் தெரிவி க்கப்படுகிறது.
தென் மாகாண சபைக்குத் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் 53 உறு ப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார் கள். கூடுதல் வாக்குகளைப் பெறும் கட்சிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும்.
நேற்றைய தேர்தலில் 18 அரசியல் கட்சிகளிலும் 13 சுயேச்சைக் குழுக்க ளிலுமாக 1091 பேர் போட்டியிட் டனர்.
தேர்தல் முடிவுகளை நள்ளிரவு அளவில் வெளியிடுவதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிரு ந்தன. வெற்றிபெற்ற கட்சிகளின் விப ரங்கள் இன்று காலை வெளிவந்து விடும்.
தெரிவானோரின் விருப்பு வாக்கு கள் பற்றிய விபரங்கள் இன்று நண் பகல் அளவில் வெளிவந்துவிடுமென எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டு நடை பெற்ற ஐந்தாவது தென் மாகாண சபைக்கான தேர்தலில் 21 தொகு திகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியிருந்தது. இந்தத் தேர்தலில் முன்னணி கூடுதல் விகிதாசாரத்தில் வெற்றி கிட்டுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment