
இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்படை கப்பலான ஐ. என். எஸ். சாதுல் மற்றும் இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் படைக் கப்பலான ‘வருண’ என்பன நேற்று முன்தினம் (5) இலங்கையை வந்தடைந் ததாகவும் இவற்றுடன் 250 கடற்படை வீரர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய கடற்படை படகுகளுடன் இல ங்கை கடற்படை கப்பல்களான ‘சயுர’ மற்றும் ‘சாகர’ என்பனவும் அதிவேக தாக்குதல் கப்பல்களும் விசேட படகுகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இவை நேற்று (6) முதல் 72 மணி நேர கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்திய கப்பல்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டே இங்கு வந்துள்ளதோடு இலங்கை கடற்படையின் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சியையும் அனுபவத்தையும் வழங்கும் வகையிலேயே கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். சுமார் 100 பயிற்சிபெறும் கடற்படை வீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.
0 commentaires :
Post a Comment