இந்தியாவிற்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த இலங்கை பெண் ஒருவர் உத்தரப் பிரேதசத்தில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் புகையிரதம் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், அவரது இறுதி பிரேத பரிசோதனைகளின் பின்னரே இதற்கான உண்மை காரணம வெளிவரும் என உத்தரப் பிரதேச பொலிஸ் அதிகாரி ஆர் பி சிங் தெரிவித்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர், சுமார் 100 பேருடன் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டதாகவும், அவர்கள் கடந்த வாரனாசியில் இருந்து சார்நாத் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பயணிக்கும் வழியில் தேனீருக்காக பேருந்து நிறுத்தப்பட்டிருந்த வேளையில், அவர் தனியாக வெளியில் சென்றதாகவும், நீண்டநேரம் திரும்பாததை அடுத்து நண்பர்களால் தேடப்பட்ட வேளையில் அவரது சடலமே மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment